நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து – 26 பேர் பலி!
நைஜீரியாவில் உள்ள வடமேற்கு மாநிலமாகிய சோகோடோ எனும் பகுதியில் உள்ள ஆற்றில் மரப் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து சொகோடோ பகுதியின் அலியு தண்டனி எனும் அரசு அதிகாரி ஒருவர் பேசுகையில், பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் பெண்கள் தான் எனவும், அவர்கள் பக்கத்தில் உள்ள பதியவா எனும் பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது, இந்த விபத்து ஏற்பட்டதாகவும், உயிரிழந்தவர்களில் 21 பேர் பெண்கள் மற்றும் 5 பேர் குழந்தைகள் எனவும் தெரிவித்துள்ளார்.