#BREAKING: விருதுநகரில் மின்னல் தாக்கி 4 பேர் உயிரிழப்பு!
கட்டட வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது மின்னல் தாக்கியதில் பெண் உள்பட 4 பேர் உயிரிழப்பு.
விருதுநகர் கருப்புசாமி நகரில் மின்னல் தாக்கி கட்டட தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கருப்புசாமி நகரில் கட்டட வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது மின்னல் தாக்கியதில் பெண் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த ஜெயசூரியா, கார்த்திக் ராஜா, முருகன், ஜக்கம்மா ஆகியோரின் உடலை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.