தவறுதலாக விஷ காளான்களை சாப்பிட்ட 13 பேர் உயிரிழப்பு …!

அசாமில் உள்ள சாரைடியோ, திப்ருகார், சிவசாகர் மற்றும் டின்சுகியா ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 2 நாட்களில் மட்டும் 13 பேர் தவறுதலாக விஷக் காளான்களை சாப்பிட்டு உயிரிழந்துள்ளதாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பிரசாந்த் டிஹிங்கியா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த நான்கு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 35 நோயாளிகள் காளான் சாப்பிட்டு உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 13 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.