தளபதி படம் பார்க்க போலீசிடம் அடி வாங்கினேன்.! ரகசியம் கூறும் நெல்சன்.!
தமிழ் சினிமாவில், கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் நெல்சன். தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜயை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் கலவையான கருத்துக்களை கூறிவருகிறார்கள்.
நெல்சன் தீவிர விஜய் ரசிகர் என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒரு விஷயம். அவரை சிறிய வயதில் இருந்தே திரையில் பார்த்து ரசித்து விட்டு தற்போது அவரை வைத்து படமே இயக்கியுள்ளார். படமும் அதே போல் தாறுமாக எடுத்துள்ளார் என்றே கூறவேண்டும்.
இந்த நிலையில், நெல்சன் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில விஜய் படத்திற்காக டிக்கெட் வாங்கிக்கொண்டு நண்பர்களுடன் பார்த்த அனுபவங்கள் குறித்தும் விஜய் குறித்தும் பேசியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியது ” குருவி படம் வெளியாகும் போது நானும் என்னுடைய நண்பனும் இணைந்து படத்திற்கு டிக்கெட் எடுத்தோம்..அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் லத்தியால் வரிசையாக அடித்து கொண்டே வந்தார்..அப்போ எனக்கும் ஒரு அடிவிழுந்தது.. என்னுடைய நண்பனுக்கு ரொம்ப அடி “.. என்று சிரித்து கொண்டே நெல்சன் பேசியுள்ளார்.
மேலும் பேசிய நெல்சன் ” அந்த அடியை வாங்கிகிட்டு படம் பார்க்கும்போது ஒரு பயர் வரும்…என்னுடைய நண்பர்கள் சிலர் வேறொருவருடைய ரசிகரா இருப்பாங்க அவுங்களோட படம் வெளியாகும் போது எங்களை கூப்பிட்டு போவாங்க.. விஜய் சார் படம் வரும் பொது நாங்க அவுங்கள கூப்பிட்டு போவோம்” என்று கூறியுள்ளார்.