மீனவர்களுக்கான கூட்டுறவு வங்கி தொடங்கப்படும் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
விவசாயிகள் போன்று மீனவர்களுக்கான தனி கூட்டுறவு வங்கி தொடங்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மீனவர்கள் வங்கி சேவைகளை எளிமையாக பெற, விவசாய கூட்டுறவு வங்கிகள் செயல்படுவதை போல், மீனவர்களுக்கு கூட்டுறவு வங்கி தொடங்க முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவு பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டுறவு வங்கி மூலம் மீனவர்களுக்கு எளிதில் வங்கி சேவை கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அவர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தொழில்நுட்ப உதவியுடன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விசைப்படகுகளுக்கும் டிரான்ஸ்பார்மர்கள் பொருத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.50 கோடியில் நவீன மீன் சந்தைகள் நிறுவப்படும் பேரவையில் அமைச்சர் அறிவித்துள்ளார்.