சமத்துவ நாள்:சக மனிதர்களிடம் “சாதி” களைய வேண்டும் – தமிழக அரசு அரசாணை!

Default Image

அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் தேதி இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.மேலும், அம்பேத்கர் மணிமண்டபத்தில் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்படும் என்றும் அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் செம்பதிப்பாக தமிழில் மொழி பெயர்க்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில்,அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளான ஏப்ரல் திங்கள் 14-ஆம் தேதியில் ஆண்டுதோறும் தலைமைச் செயலகம் தொடங்கி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் ‘சமத்துவ நாள்’ ஆக கடைப்பிடிக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும்,அந்நாளில் கீழ்கண்ட உறுதிமொழியினை அனுசரிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி,

“சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும்,சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகவும்,தொடர்ந்து போராடி, ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும்,வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து,எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டி,

நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில்,சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும்,சகமனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் காணமாட்டேன் என்றும்,சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் கடைப்பிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன்”,என்று உறுதிமொழி ஏற்க வேண்டும் என ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்