#RainBreaking:தமிழகத்தில் இன்று மிக கனமழை;60 கிமீ வேகத்தில் காற்று வீசும்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
இன்று:தென் தமிழகம்,நீலகிரி,கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.அதே சமயம், ஈரோடு,சேலம்,நாமக்கல்,கரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை:தென் தமிழகம்,திருப்பூர்,கோவை,நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும்,மேலும், தமிழகம்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை:
அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்,அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 35°C மற்றும் 28°C ஆக இருக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தென் தமிழகக் கடலோரப் பகுதிகளிலும்,குமரி பகுதியிலும் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ – 60 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இன்றும்,நாளையும் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
13.04.2022 தேதியிலிருந்து தமிழகத்தின் அடுத்த ஐந்து நாட்களுக்குகான வானிலை முன்னறிவிப்பு. pic.twitter.com/jXePNaFNA6
— TN SDMA (@tnsdma) April 13, 2022