தன்னை நேரில் வந்து சந்திக்குமாறு ஈஸ்வரப்பாவுக்கு கர்நாடக முதல்வர் அழைப்பு!
முதல்வருடனான சந்திப்புக்கு பிறகு அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும் என தகவல்.
கர்நாடக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.எஸ் ஈஸ்வரப்பா மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஈஸ்வரப்பா மீது குற்றசாட்டிய ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டில் உயிரிழந்த நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், அமைச்சர் கே.எஸ் ஈஸ்வரப்பா மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகளான பசவராஜ் மற்றும் ரமேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஒப்பந்ததாரரை தற்கொலைக்கு தூண்டியதாக கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தன்னை நேரில் வந்து சந்திக்குமாறு ஈஸ்வரப்பாவுக்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அழைப்பு விடுத்துள்ளார். முதல்வருடனான சந்திப்புக்கு பிறகு அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.