சம்பந்தி போஜனம், ‘சமத்துவ விருந்து’ என பெயர் மாற்றம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

வி.சி.க எம்.எல்.ஏ சிந்தனைச்செல்வனின் கோரிக்கையை ஏற்று சம்பந்தி போஜனம், ‘சமத்துவ விருந்து’ என பெயர் மாற்றம் செய்யப்படும் என முதல்வர் அறிவிப்பு.
சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சமூகநீதி பாதையில் செயல்பட்டு வருகிறது. வன்கொடுமை சம்பவங்களை தடுக்க எத்தனையோ முயற்சி எடுத்தாலும், ஆங்காங்கே சில பிரச்சனைகள் நடக்கின்றன. வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தார்.
மேலும், வி.சி.க எம்.எல்.ஏ சிந்தனைச்செல்வனின் கோரிக்கையை ஏற்று சம்பந்தி போஜனம், ‘சமத்துவ விருந்து’ என பெயர் மாற்றம் செய்யப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!
April 25, 2025
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025