பிறந்த குழந்தையுடன் சென்ற ஆம்புலன்ஸ் விபத்து…! குழந்தை மற்றும் ஓட்டுநர் உயிரிழப்பு…!
கோவையில் ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் குழந்தை இருவரும் உயிரிழப்பு.
கோவை மாவட்டம் உடுமலை பேட்டையில் இருந்து, அம்புலன்ஸ் ஒன்று பிறந்த குழந்தையுடன், கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளது. ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த போது, மலுமிச்சம்பட்டி அருகே கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்தில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் குழந்தை இருவரும் உயிரிழந்துள்ளனர். ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளாகி குழந்தை மற்றும் ஓட்டுநர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.