கம்பளா பந்தயம் – புதிய சாதனை படைத்த நிஷாந்த் ஷெட்டி!

Default Image

கம்பளா பந்தயத்தில் 125 மீட்டர் பந்தய தூரத்தை, வெறும் 10.44 விநாடிகளில் கடந்து நிஷாந்த் ஷெட்டி புதிய சாதனை.

கர்நாடகா மாநிலத்தில் வருடந்தோறும் நடைபெறும் கம்பளா போட்டிகள் மிகவும் பிரபலமானது. இரு எருமைகளை பூட்டிக்கொண்டு, அதன் கயிற்றை விடாமல் எருமை மாடுகளுடன் ஓடி பந்தய தூரத்தைக் கடக்க வேண்டும் எனபது இப்போட்டியின் விதியாகும். அந்தவகையில் இந்தாண்டு மங்களூரில் நடைபெற்ற கம்பாலா போட்டியில் பஜகோலி ஜோகிபெட்டுவில் வசிக்கும் கம்பாலா ஓட்டப்பந்தய வீரர் நிஷாந்த் ஷெட்டி புதிய சாதனை படைத்துள்ளார்.

மங்களூரு மாவட்டம், பெல்தங்கடி தாலுகாவில் வேணூர்-பெர்முடா பகுதியில் சூர்ய சந்திர ஜோடுகரே என்ற அமைப்பு சார்பில் கம்பாலா போட்டிகள் நடைபெற்றன. இதில், சீனியர் பிரிவில் கலந்துகொண்ட நிஷாந்த் ஷெட்டி (30 வயது) தனது ஜோடி எருமை மாடுகளுடன் 125 மீட்டர் பந்தய தூரத்தை, வெறும் 10.44 விநாடிகளில் கடந்து வெற்றி பெற்றார். இதை 100 மீட்டருக்கு கணக்கிடும் போது, 8.36 விநாடிகளில் கடந்து, கம்பளா பந்தயத்தின் உசைன் போல்ட் என்று அழைக்கப்படும் ஸ்ரீனிவாஸ் கவுடாவின் சாதனையை முறியடித்துள்ளார்.

தற்போதைய சாம்பியனான ஸ்ரீனிவாஸ் கவுடா, கடந்த ஆண்டு மாவட்டத்தில் உள்ள காக்கேபடவுவில் நடந்த சத்ய தரமா ஜோடுகெரே கம்பளா பந்தியத்தில் 100 மீட்டருக்கு கணக்கிடும் போது 8.78 வினாடிகளில் ஓடி சாதனை படைத்திருந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு கம்பளா பந்தயத்தில் ஸ்ரீநிவாஸ் கவுடா 8.78 வினாடிகளில் கடந்த நிலையில், இந்தாண்டு 8.36 விநாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார் நிஷாந்த் ஷெட்டி என்பது குறிப்பிடத்தக்கது. வேனூர் கம்பளத்தில் மொத்தம் 151 ஜோடி எருமை மாடுகள் பங்கேற்றதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்