ரூ.1 கோடி செலுத்த வேண்டுமா? – இலங்கை நீதிமன்றத்திற்கு ஓபிஎஸ் கண்டனம்!
மீனவர்களை விடுவிக்க ரூ.1 கோடி செலுத்த வேண்டும் என்று கூறியுள்ள இலங்கை நீதிமன்றத்திற்கு கண்டனம்.
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் ஜாமீனில் செல்ல வேண்டுமானால், ரூ.1 கோடி பிணைத் தொகை செலுத்த வேண்டும் என அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு தமிழகத்தில் அரசிய தலைவர்கள் பலரும் தங்களது கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இலங்கை நீதிமன்றத்திற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பொதுவாக நாட்டிலுள்ள அனைத்து குடிமக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், அந்த நீதி விரைந்து கிடைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் தான் நீதிமன்றங்கள் இயங்குகின்றன. ஆனால், நீதிமன்றங்களே அநீதியான தீர்ப்பை வழங்கும் நடைமுறை இலங்கை நாட்டில் இருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது.
சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க ரூ.1 கோடி செலுத்த வேண்டும் என்று கூறியுள்ள இலங்கை நீதிமன்றத்திற்கு கண்டனம். இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை தாய்நாட்டிற்கு அழைத்து வரவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்கவும், தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு வலியுறுத்தியுள்ளார்.
சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க ரூ.1 கோடி செலுத்த வேண்டும் என்று கூறியுள்ள இலங்கை நீதிமன்றத்திற்கு கண்டனம்!
இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை தாய்நாட்டிற்கு அழைத்து வரவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்கவும், தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்க! pic.twitter.com/gHnR7ZgTKZ
— O Panneerselvam (@OfficeOfOPS) April 12, 2022