மக்கள் அமைதி காக்க வேண்டும் – ராஜபக்ஷே வேண்டுகோள்
மகிந்த ராஜபக்ஷே, இலங்கை மக்கள் அமைதி காக்க வேண்டும் வேண்டுகோள்.
இலங்கையை பொறுத்தவரையில் கொரோனா பெருந்தொற்றுக்கு பின் பெரிய அளவிலான பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நிய செலவாணி வரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்துப் பொருட்களும் வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. இதனால், அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
அங்கு தினமும் 10 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு ஏற்படுவதுடன், அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த நிலையில், இலங்கையில் காணப்படும் விலை உயர்வு காரணமாக சிலர் இந்தியாவுக்கு அகதிகளாக வருகின்றனர்.
இலங்கை அரசுக்கு எதிராக மக்களின் போராட்டம் நீடித்து வரும் நிலையில், மகிந்த ராஜபக்ஷே, இலங்கை மக்கள் அமைதி காக்க வேண்டும். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கை அரசு 24 மணிநேரமும் பாடுபட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.