#NewCabinet:அமைச்சரான நடிகை ரோஜா – பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஆளுநர்!

ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது.அப்போது,இரண்டரை ஆண்டுகளில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்று ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து,அண்மையில் அமைச்சர்கள் சிலர் ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில்,ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடிகை ரோஜா உட்பட 25 அமைச்சர்கள் பதவியேற்றனர்.மாநில தலைநகர் அமராவதியில் உள்ள மாநில செயலகம் அருகே நடைபெற்ற பொது நிகழ்ச்சியில்,கவர்னர் பிஸ்வ பூசன் ஹரிசந்தன், 25 அமைச்சரவை உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையில் மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்தவர்கள் மற்றும் மாநிலத்தில் சமநிலையான நிர்வாகத்திற்கான புதிய மற்றும் இளம் முகங்கள் இடம் பெற்றுள்ளனர்.
Andhra Pradesh | Swearing-in ceremony of new cabinet ministers underway at Amaravati pic.twitter.com/kEIUVmq4NY
— ANI (@ANI) April 11, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025