#BIGBREAKING: சசிகலாவை அதிமுக நீக்கியது செல்லும் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி.
அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி நீக்கியது செல்லும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா 2017-ஆம் ஆண்டு சிறைக்கு சென்றபோது, பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதன்பின்னர் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.
இந்த நிலையில், இதை எதிர்த்து சசிகலா தொடுத்த வழக்கு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுக்களை ஏற்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது, பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானம் செல்லும் என்றும் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.