தனியார் மருத்துவமனைக்கு எச்சரிக்கை – மருத்துவத்துறை அமைச்சர்
கொரோனாவில் இருந்து இன்னும் முழுமையாக நாம் விடுபடவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல்.
இதுதொடர்பாக பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனாவில் இருந்து இன்னும் முழுமையாக நாம் விடுபடவில்லை என தொடர்ச்சியாக கூறி வருகிறோம். சீனா, மேற்காசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வருகிறது என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அவர், தனியார் மருத்துவமனைகள் அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அலட்சியப்படுத்தினால், புகார் அடிப்படையில் அந்த மருத்துவமனையின் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அலட்சியம் காட்டும் மருத்துவமனை திட்டத்தில் இருந்து விலக்கி வைக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.