#Goodnews:மீண்டும் அதிரடியாக குறைந்த கொரோனா பாதிப்பு;பலி!
இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 861 பேருக்கு கொரோனா பாதிப்பு;6 பேர் கொரோனாவுக்கு பலி.
இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 1,054 ஆக இருந்த நிலையில் கடந்த ஒரே நாளில் 861 ஆக குறைந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,36,132 ஆக பதிவாகியுள்ளது.
அதுமட்டுமில்லாமல் கடந்த ஒரே நாளில் 929 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.மேலும், இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,25,03,383 ஆக அதிகரித்துள்ள நிலையில்,கொரோனாவுக்கு 6 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.இதுவரை மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 5,21,691 ஆக பதிவாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 11,058 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நாட்டில் இதுவரை 1,85,74,18,827 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் இந்தியாவில் ஒரே நாளில் 2,44,870 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.