தொடர்ச்சியாக 250 லேப்டாப்களை திருடி வந்த இளைஞர் கைது …!
தொடர்ச்சியாக 250 லேப்டாப்களை திருடி வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையிலுள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் பயின்று வரும் மாணவர்களின் லேப்டாப்கள் தொடர்ச்சியாக திருடப்பட்டு கொண்டே இருந்துள்ளது. இது தொடர்பாக அம்மருத்துவமனையிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகிய காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.
இதனையடுத்து குற்றவாளியான செம்மஞ்சேரியில் பதுங்கியிருந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தனது கல்லூரி பருவம் முதலே லேப்டாப்களை திருடி வந்ததும், இதுவரை அவர் 250-க்கும் மேற்பட்ட லேப்டாப்கள் திருடி இருப்பதும் அம்பலமாகியுள்ளது.