41 எம்பிக்கள் வாபஸ்-அழைப்பு விடுத்த அதிபர் கோட்டாபய ராஜபக்சே!
இலங்கை:இடைக்கால அரசு அமைக்க 41 எம்பிக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் கோட்டாபய ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே அரசுதான் காரணம் என்று கூறி,அதிபரை பதவி விலகக் கோரி நாளுக்கு நாள் போராட்டங்கள் வெடித்து வருகின்றன.ஆனால்,பதவியை தக்கவைத்துக் கொள்ள அதிபர் கோட்டாபய ராஜபக்சே முயற்சித்து வருகிறார்.இதனிடையே,கடந்த சில தினங்களுக்கு முன்னர் 26 அமைச்சர்கள் பதவி விலகினர்.
இந்நிலையில்,அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாகவும், தனித்து செயல்படுவதாகவும் அறிவித்த ஆளும் இலங்கை பொதுஜன பெருமுன முன்னணியை சேர்ந்த 41 எம்பிக்களுக்கு இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளார்.இடைக்கால அரசு அமைக்க 41 எம்பிக்களும் வலியுறுத்திய நிலையில்,அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளார்.
இதனிடையே,எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் கட்சியானது இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.