தமிழக மக்களைத் தாங்கொணா துயரத்தில் தள்ளி இருக்கின்றன – கமல்ஹாசன்

விலை உயர்வை கண்டித்து இன்று மநீம மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது என அக்கட்சி தலைவர் ட்வீட்.

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, பன்மடங்கு உயர்த்தப்பட்ட சொத்துவரி உள்ளிட்டவற்றைக் கண்டித்து இன்று மநீம மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. விலைவாசியை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசும், மாநில அரசும் தமிழக மக்களைத் தாங்கொணா துயரத்தில் தள்ளி இருக்கின்றன.

தொழில் பின்னடைவு, பொருளாதார நசிவு, வருவாய் இழப்பு என தமிழகம் தத்தளித்து வருகிறது. மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து மக்கள் மீது ஏற்றிய இந்தப் பெருஞ்சுமை உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும் மக்களின் வாட்டம் போக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்