ஆட்டம் ஆட ஊ சொன்ன ரசிகர்கள்.! ஊஹூம் சொல்லி தெறித்து ஓடிய ஆண்ட்ரியா.!
சேலம் மாவட்டத்தின் மல்லூரில் உள்ள வேங்காம்பட்டி கோயில் திருவிழாவின் கடைசி நாளில் திரை இசை கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் நடிகையும் பிரபல பின்னணி பாடகியுமான ஆண்ட்ரியா கலந்துகொண்டார். இதனால், அங்கு ரசிகர்கள் திரண்டனர். பல ரசிகர்கள் ஆண்ட்ரியாவின் காரை சுற்றியதால் அவரால் கீழே இறங்கமுடியவில்லை. இதனால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
அதன்பின் காரைவிட்டு மேடைக்கு வந்த ஆண்ட்ரியா புஷ்பா படத்தின் ‘ஊ சொல்றியா பாடல்’ பாடல் மற்றும் “இதுவரை இல்லாத” ஆகிய பாடல்களை பாடினார். ஆண்ட்ரியா பாடி முடித்த பின்னர் ரசிகர்கள் அவரை நடனமாட சொல்லி கத்தியுள்ளார்கள்.இதனால் , கோபமடைந்த ஆண்ட்ரியா சிறிது நேரம் அமைதியாக நின்றுவிட்டு, பாடதான் முடியும் ஆட முடியாது என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.