இதற்குமேலும் ‘இந்தி’ யா..?தாங்குமா இந்தியா..? – வைரமுத்து ட்வீட்

Default Image

மொழி என்பது தேவை சார்ந்ததே தவிர திணிப்பு சார்ந்ததல்ல என கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார். 

டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் அமித் ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியைத்தான் ஆங்கிலத்துக்கு மாற்றாக கருத வேண்டும். உள்ளூர் மொழிகளை அல்ல. இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும், ஹிந்திதான் நாட்டின் அதிகாரபபூர்வ மொழியாகும் என தெரிவித்துள்ளார். இவரது பேச்சு சர்ச்சையை எழுப்பியுள்ள நிலையில், இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வடக்கே வாழப்போன தமிழர் இந்தி கற்கலாம் தெற்கே வாழவரும் வடவர் தமிழ் கற்கலாம் மொழி என்பது தேவை சார்ந்ததே தவிர திணிப்பு சார்ந்ததல்ல வடமொழி ஆதிக்கத்தால் நாங்கள் இழந்த நிலவியலும் வாழ்வியலும் அதிகம் இதற்குமேலும் இந்தியா? தாங்குமா இந்தியா?’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்