#Breaking:கட்சிகள் இலவசம் வழங்குவதை தடுக்க முடியாது – கூறும் தேர்தல் ஆணையம்!
அரசியல் கட்சிகள் இலவசம் வழங்குவதை தடுக்க முடியாது என தேர்தல் ஆணையம் தகவல்.
அரசியல் கட்சிகள் இலவச திட்டங்களை வாக்குறுதிகளாக அறிவிப்பது அக்கட்சிகளின் கொள்கை சார்ந்த முடிவுகளாகும்.மேலும்,தேர்தலுக்கு முன்போ,பின்போ இலவசங்கள் வழங்குவது என்பது கட்சிகளின் கொள்கை முடிவுகளாகும்.
இதனால்,இலவச திட்டங்கள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் கொள்கைகள், முடிவுகளை தேர்தல் ஆணையம் முறைப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் வரிப்பணத்தைக் கொண்டு இலவச திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாக அரசியல் கட்சிகள் அறிவிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில் பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு கடந்த ஜனவரி மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில்,இலவச திட்டங்கள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் கொள்கைகள்,முடிவுகளை முறைப்படுத்த முடியாது என தேர்தல் ஆணையம் பிரமாணப்பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.