தனுஷ்கோடிக்கு உதவியாக களமிறங்கும் அப்துல் காலிக்.! இதுவும் ரீஎன்ட்ரி தான்.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
நடிகர் சிம்பு நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சினிமாவில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்து 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிம்புவின் தந்தை டி.ராஜேந்திரன் “சிம்பு சினி ஆர்ட்ஸ் ” எனும் பட தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்தார். அவர் நடித்த படங்கள், சிம்பு நடித்த ஆரம்பகால சில திரைப்படங்கள் என அனைத்தையும் அந்த நிறுவனம் தயாரித்தது.
அடுத்தாக சிம்பு ஒழுங்காக படங்களில் நடிக்காமல் இருந்ததால், அந்த நிறுவனம் பட தயாரிப்பதையும் நிறுத்தியது.இதனையடுத்து சிம்பு தற்போது சினிமாவில் மீண்டும் சரியாக நடிக்க வந்துவிட்டதால் சிம்பு “சிம்பு சினி ஆர்ட்ஸ் ” நிறுவனமும் பழையபடி படங்களை தயாரித்து வழங்க ஆரம்பித்துவிட்டது.
நீண்ட ஆண்டுகளுக்கு பின் “சிம்பு சினி ஆர்ட்ஸ்” நிறுவனம் விநியோகஸ்தராக களமிறங்குகிறது. அதன்படி, தற்போது இயக்குனரும்,நடிகருமான எஸ்ஜேசூர்யா தற்போது நடித்துள்ள திரைப்படம் “கடமையை செய்”. இந்த படத்தின் திரையரங்கு உரிமத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இப்படத்தை வெங்கட் ராகவன் எனும் இயக்குனர் இயக்கி உள்ளார். யாஷிகாஆனந்த் ஹீரோயினாக நடித்து உள்ளார். மே மாதம் இப்படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
அடிமேல் அடி…லைக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த விடாமுயற்சி! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
February 7, 2025![VidaaMuyarchi box office](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/VidaaMuyarchi-box-office-.webp)
மாநிலங்களுக்கு மத்திய அரசு தரும் அல்வாதான் இப்போ ஃபேமஸ்! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
February 7, 2025![mk stalin about CentralGovt](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/mk-stalin-about-CentralGovt.webp)