#BREAKING: சிஐஐ மாநாட்டை தொடக்கி வைத்த முதலமைச்சர் முக ஸ்டாலின்!
தென்னிந்திய ஊடகம், பொழுதுபோக்கு மாநாட்டை முதலமைச்சர் தொடக்கி வைத்தார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் கருத்தரங்கை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடக்கி வைத்தார். சிஐஐ கூட்டமைப்பு சார்பில் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. தொடக்க நிகழ்வில் இயக்குனர்கள் மணிரத்தினம், ராஜமௌலி, நடிகர்கள் ஜெயராம், ஜெயம் ரவி மற்றும் ரமேஷ் அரவிந்த் உள்ளோட்டர் கலந்துகொண்டுள்ளனர். இரண்டு நாட்கள் இந்த கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
இந்த காருத்தரங்கில் இந்திய அளவில் தென்னிந்திய பங்களிப்பு என்ற தலைப்பில் விவாதிக்கப்பட உள்ளது. திரைப்படங்களில் தொழில்நுட்ப வளர்ச்சி, சமூக வலைத்தளங்களில் திரைப்படங்கள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம், குறைந்தபடச்சத்தில் பெருமளவில் படங்கள் வெளியாகும் நிலையில், தரமான படங்களை எப்படி வெளியிடுவது, அதற்கான அங்கீகாரத்தை எப்படி பெறுவது மற்றும் ஓடிடி வளர்ச்சி சமீப காலமாக அதிகரித்து வரும் நிலையில், அதுகுறித்த விவாதங்களும் நடைபெற உள்ளது. மேலும், கருத்தரங்கில் 300க்கும் மேற்பட்ட திரைப்பட கலைஞரகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.