#Alert:தமிழகத்தில் இன்றும்,நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்றும்,நாளையும் டெல்டா மாவட்டங்கள்,மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்,தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இன்று லேசானது முதல் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்,தென் தமிழக கடற்கரை,குமரி பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
09.04.2022 : தென் தமிழக கடற்கரை, குமரி பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். pic.twitter.com/X9d8yzIOPw
— TN SDMA (@tnsdma) April 9, 2022