அமித்ஷாவின் பேச்சை வன்மையாக கண்டிக்கிறோம் – விசிக தலைவர் திருமாவளவன் ட்வீட்
ஒரேநாடு- ஒரேமொழி எனும் ஃபாசிசப் போக்கை வலுவாக திணிப்பதற்குரிய ஆபத்தான முயற்சி என திருமாவளவன் ட்வீட்.
ஆங்கிலத்திற்கு மாற்றாக நாட்டின் ஒருமைப்பாட்டிற்கான மொழியாக ஹிந்தியை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள மக்கள் ஆங்கிலத்திற்கு பதிலாக ஹிந்தி மொழியை பேச வேண்டுமெனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது குறித்து அரசியல் தலைவர்கள் பலர் தங்களது கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அமித் ஷா பேச்சு குறித்து பதிவிட்டுள்ளார். அதில் இந்திய அலுவல் மொழிகள் 22. இந்தி அவற்றுள் ஒன்று. இந்தியைப் பேசுவோரின் எண்ணிக்கையை விட பிறமொழிகள் பேசுவோரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகம்.
ஆனால், பிறமொழிகளைப் பேசுவோரின் உரிமைகளுடன் நாட்டின் பன்மைத்துவத்தையும் சிதைக்கிற முயற்சியில் குறியாகவுள்ளனர். எனவேதான் அமித்ஷா இப்படி பேசிகிறார். அமித்ஷாவின் இந்தக் கருத்துப் புதியதல்ல. ஒரேநாடு- ஒரேமொழி எனும் ஃபாசிசப் போக்கை வலுவாக திணிப்பதற்குரிய ஆபத்தான முயற்சி. ஆங்கிலம் அந்நிய மொழி என்னும் வாதங்களை முன்வைத்து அப்பாவி மக்களை ஏய்க்கும் நோக்கில் ஈடுபடுகின்றனர். இவர்களின் மக்கள் விரோதப் போக்கினை வன்மையாகக் கண்டிருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
இந்திய அலுவல் மொழிகள் 22. இந்தி அவற்றுள் ஒன்று. இந்தியைப் பேசுவோரின் எண்ணிக்கையை விட பிறமொழிகள் பேசுவோரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகம்.
ஆனால், பிறமொழிகளைப் பேசுவோரின் உரிமைகளுடன் நாட்டின் பன்மைத்துவத்தையும் சிதைக்கிற முயற்சியில் குறியாகவுள்ளனர். எனவேதான் அமித்ஷா இப்படி பேசிகிறார். pic.twitter.com/zwNwdGQzse— Thol. Thirumavalavan (@thirumaofficial) April 8, 2022