இணைப்பு மொழி என்று ஒன்றைத் திணிப்பது நாட்டை இணைக்கப் பயன்படாது – கனிமொழி எம்.பி
இணைப்பு மொழி என்று ஒன்றைத் திணிப்பது நாட்டை இணைக்கப் பயன்படாது அது பிரிக்கத்தான் பயன்படும் என கனிமொழி எம்.பி ட்வீட்.
டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் அமித் ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியைத்தான் ஆங்கிலத்துக்கு மாற்றாக கருத வேண்டும். உள்ளூர் மொழிகளை அல்ல. இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும், ஹிந்திதான் நாட்டின் அதிகாரபபூர்வ மொழியாகும் என தெரிவித்துள்ளார்.
அமித்ஷாவைன் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இணைப்பு மொழி என்று ஒன்றைத் திணிப்பது நாட்டை இணைக்கப் பயன்படாது அது பிரிக்கத்தான் பயன்படும். ஒன்றிய அரசும் அமைச்சர்களும் இந்தி எதிர்ப்பின் வரலாற்றை, தியாகங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
இணைப்பு மொழி என்று ஒன்றைத் திணிப்பது நாட்டை இணைக்கப் பயன்படாது அது பிரிக்கத்தான் பயன்படும். ஒன்றிய அரசும் அமைச்சர்களும் இந்தி எதிர்ப்பின் வரலாற்றை, தியாகங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும்.https://t.co/JoFxgWDFNA
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) April 8, 2022