ஒன்றரை வயது குழந்தையுடன் பள்ளி சென்ற சிறுமியை நேரில் சந்தித்த
கடந்த இரு தினங்களுக்கு முன்பதாக மணிப்பூரை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது ஒன்றரை வயது சகோதரியுடன் பள்ளிக்கு சென்று படிப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது. எனவே, இந்த குழந்தைக்கு கல்வியின் மீது இருக்கும் ஆர்வத்தை பலரும் பாராட்டி வந்தனர்.
இந்நிலையில் மணிப்பூர் மந்திரி தோங்கம் பிஸ்வஜித் சிங் தற்பொழுது இந்த சிறுமியை நேரில் சென்று பார்த்துள்ளார். மேலும் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நாங்கள் எங்களுக்கு தெரிந்த ஒரு பள்ளி மூலம் அவளது கல்விக்கு உதவ முடிவு செய்துள்ளோம். அவள் பட்டப்படிப்பு முடிக்கும் வரை எல்லா செலவுகளையும் நான் பார்த்துக் கொள்வேன் என அவளுடைய பெற்றோருக்கு உறுதியளித்துள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
The Brave Girl #MeiningsinliuPamei visited my home today along with her parents.
We have decided to assist her #Education through a Boarding School & promised her parents that I will be looking after all her expenses till she Graduates.#BetiBachaoBetiPadhao pic.twitter.com/AYnGPjKi3q
— Th.Biswajit Singh (@BiswajitThongam) April 6, 2022