‘தேர்வில் தோல்வியடைந்தால் வீட்டை விட்டு துரத்திவிடுவேன்’ – தோல்வி பயத்தில் தந்தையை கொலை செய்த மகன்..!

Default Image

தேர்வில் தோல்வியடைந்தால் வீட்டை விட்டு துரத்திவிடுவேன் என கூறியதால் தந்தையை கொலை செய்த மகன். 

மத்திய பிரதேசத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் தனது  தனது தந்தை தேர்வில் தோல்வியடைந்தால் வீட்டை விட்டு வெளியே துரத்தி விடுவேன் என்று கூறிய காரணத்திற்காக தந்தையைக் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் கூறுகையில், 46 வயதான மெடிக்கல் ஷாப் உரிமையாளர் சனிக்கிழமை இரவு இறந்துகிடந்தார்.

அவர் அண்டைவீட்டாரால் கொல்லப்பட்டதாக அந்த நபரின் மகன் தெரிவித்துள்ளார். தனது தந்தையுடன் வடிகால் தொடர்பாக சண்டையிட்டதாகவும்,  மேலும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டியதாகவும் சிறுவன் தெரிவித்துள்ளார்.

 ஆனால் விசாரணையில் குற்றம் நடந்தபோது கதவுகள் உள்ளே இருந்து பூட்டப்பட்டு இருந்ததால், அந்த நபர் ஒரு குடும்ப உறுப்பினரால் கொல்லப்பட்டார் என்பது கண்டறியப்பட்டது. போலீசார் குடும்ப உறுப்பினர்களை விசாரித்தனர் மற்றும் அவரது மகனை சந்தேகித்தனர். ஏனென்றால் அவர்தான் உடலை முதலில் பார்த்துள்ளார்.

பின் விசாரணையில் சிறுவன் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். சிறுவன் கூறுகையில் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் வீட்டைவிட்டு துரத்தி விடுவேன் என்று மிரட்டியதால் தந்தையைக் கொன்றதாகவும் தேர்வில் தோற்று விடுவோமோ என்ற பயத்தில் இருந்ததாகவும் அதனால் அவர் தூங்கும்போது தந்தையை கோடரியால் தாக்கி கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர் சிறுவன் தனது விரல்களை மெழுகுவர்த்தியால் எரித்தான், அதனால் கோடரியில் உள்ள கைரேகை அவனுடன் பொருந்தவில்லை என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்