#BREAKING : தமிழக மீனவர்கள் பிணையில் செல்ல ரூ.1 கோடி செலுத்த வேண்டும் – இலங்கை நீதிமன்றம்

Default Image

தமிழக மீனவர்கள் பிணையில் செல்ல வேண்டுமென்றால் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1 கோடி செலுத்த வேண்டும் என்று இலங்கை நீதிமன்றம் உத்தரவு. 

இலங்கை கடற்படையினர் கடந்த சில காலமாகவே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்களை கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த மார்ச் 24-ஆம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்தது.

இந்த நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் 12 போரையும் மே 12-ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க கிளிநொச்சி நீதிமனஞ் உத்தரவிட்டுள்ளது. மேலும் தமிழக மீனவர்கள் பிணையில் செல்ல வேண்டுமென்றால் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1 கோடி செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மீனவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்