4ஜி சேவைக்கு முன் நாடு முழுவதும் 1.12 லட்சம் டவர்களை நிறுவ பிஎஸ்என்எல் திட்டம்…!
4ஜி தொலைத்தொடர்பு சேவை பயன்ப்பாட்டுக்கு வருவதற்கு முன், பிஎஸ்என்எல் நாடு முழுவதும் 1.12 லட்சம் டவர்களை அமைக்க உள்ளது.
நேற்று கேள்வி நேரத்தின்போது மக்களவையில் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அரசு டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் தனது 4ஜி தொலைத்தொடர்பு சேவையை விரைவில் இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தவுள்ளது.
அதன்படி, 4ஜி தொலைத்தொடர்பு சேவை பயன்ப்பாட்டுக்கு வருவதற்கு முன், பிஎஸ்என்எல் நாடு முழுவதும் 1.12 லட்சம் டவர்களை அமைக்க உள்ளது. மேலும் பிஎஸ்என்எல் உடனடியாக 6000 டவர்களுக்கு ஆர்டர் கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், அடுத்தகட்டமாக 6 ஆயிரம் டவர்களுக்கும் இறுதியில் ஒரு லட்சம் டவர்களும் அமைக்கப்படும் என்றும், ரயில்களிலும் இண்டர்நெட் சேவை அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.