#Breaking:பரபரப்பு…முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் திடீர் கைது!
விழுப்புரம்:காவல் துறையினர் அனுமதி அளிக்காத நிலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது.
விழுப்புரத்தில் பழைய பேருந்து நிலையம் அருகே திமுக அரசுக்கு எதிராக அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக அரசு கொண்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து,சொத்துவரி உயர்வு ஆகியவற்றிற்கு எதிராக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், காவல்துறையினர் அனுமதி அளிக்காத இடத்தில் போராட்டம் நடத்தியதற்காக சி.வி.சண்முகம் கைது செய்யப்பட்டுள்ளார்.அவருடன் 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே,முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது செய்யப்பட்டு காவல்துறையினரின் வாகனத்தில் ஏற்றப்பட்டபோது,அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.