#IPL2022: முதல் வெற்றியை பதிவு செய்யுமா மும்பை?

Default Image

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, புனேவில் உள்ள MCA மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஐபிஎல் திருவிழா மிகச்சிறப்பாகவும், அதிரடியாகவும் நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 14-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளது. புனேவில் உள்ள MCA மைதானத்தில் இன்று இரவு 7:30-க்கு இந்த போட்டி தொடங்கவுள்ளது. மும்பை மற்றும் கொல்கத்தா அணி, இதுவரை 29 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் கொல்கத்தா அணி 7 போட்டிகளிலும், மும்பை அணி 22 போட்டிகளிலும் வெற்றிபெற்று அசத்தியது. இதனால் இன்றைய போட்டி, விறுவிறுப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி, நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை 3 போட்டிகள் விளையாடியுள்ளது. இதில் 2 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளது. மேலும், கவுதம் கம்பிர் தலைமையில் இருக்கும்போது கொல்கத்தா அணி, இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வென்றது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி சிறப்பான பார்பில் இருப்பதால், இம்முறை கோப்பையை வெல்லும் நோக்குடன் விளையாடி வருகிறது. இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால், புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்க வாய்ப்புள்ளது.

எதிர்பார்க்கப்படும் XI:

அஜிங்க்ய ரஹானே, வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், சிவம் மாவி, உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, வருண் சக்ரவர்த்தி.

மும்பை இந்தியன்ஸ்:

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, இதுவரை 5 முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளது. அதேபோல நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகளில் 2 போட்டிகள் விளையாடிய மும்பை அணி, ஒரு போட்டியில் கூட வெற்றிபெறவில்லை. இன்றைய போட்டியில் வெற்றிபெறாவிட்டால் புள்ளிப்பட்டியலில் இறுதி இடத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது. அதனால் மும்பை அணி, சிறப்பாக ஆடும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் XI:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), அன்மோல்பிரீத் சிங், திலக் வர்மா, கைரன் பொல்லார்ட், டிம் டேவிட், டேனியல் சாம்ஸ், முருகன் அஷ்வின், டைமல் மில்ஸ், ஜஸ்பிரித் பும்ரா, பாசில் தம்பி

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்