மத்திய அரசின் உத்தரவை காண்பிக்க முடியுமா..? – கே.பி.முனுசாமி
சொத்துவரி உயர்வுக்கு மத்திய அரசு தான் காரணம் என குற்றம்சாட்டும் திமுக, மத்திய அரசின் உத்தரவை காண்பிக்க முடியுமா? என கே.பி.முனுசாமி என கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள்,நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை குறைந்தபட்சமாக 25 % முதல் அதிகபட்சமாக 150 % வரை உயர்த்தி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக அரசு அறிவிப்பு விடுத்தது.ஆனால்,இதற்கு அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில்,சொத்து வரி உயர்வுக்குக் காரணமான விடியா திமுக அரசைக் கண்டித்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று (5.4.2022) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அதிமுக தலைமை கழகம் அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், சொத்து குறித்து பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, மத்திய அரசு நிதி வழங்க மாட்டோம் என கூறியதா? சொத்துவரி உயர்வுக்கு மத்திய அரசு தான் காரணம் என குற்றம்சாட்டும் திமுக, மத்திய அரசின் உத்தரவை காண்பிக்க முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.