முட்டையிடுவதற்காக கரைக்கு வந்த 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆலிவ் ரிட்லி ஆமைகள்..!
உலகிலுள்ள மிக பழமையான உயிரினங்களில் ஒன்று தான் கடலில் வாழும் ஆலிவ் ரிட்லி ஆமை. இந்த ஆமைகள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் ஏப்ரல் வரை கரையை நோக்கி நகர்ந்து வந்து முட்டையிட்டு செல்லும்.
கரையோரங்களில் குழி தோண்டி முட்டையிடும் ஆமைகளுக்கும் வனத்துறையும் பாதுகாப்பு கொடுத்து வருகிறது. இந்த முட்டைகள் 45 நாட்களுக்கு பின்னதாக இயற்கையாகவே பொரித்து வெளியே வரும்.
தற்பொழுதும் தென் பசிபிக் பெருங்கடலிலிருந்து பயணித்து ஒடிஸாவிலுள்ள கஞ்சம் மாவட்டத்தில் உள்ள ருஷிகுல்யா நதியோரத்தை நோக்கி சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான ஆலிவ் ரிட்லி ஆமைகள் முட்டையிடுவதற்காக வந்துள்ளன.
ஒவ்வொரு பெண் ஆமைகளும் சுமார் 120 முதல் 150 வரை முட்டைகளிட்டு கடற்கரைக்கும் திரும்பும் என கூறப்படுகிறது. இது குறித்து தெரிவித்துள்ள வனத்துறை அதிகாரிகள், கடந்த ஞாயிற்றுக்கிழமை 5.5 லட்சம் ஆமைகள் கடற்கரையோரத்திற்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.