ஆர்ஆர்ஆர் படத்தின் பிரம்மாண்ட வசூல் நிலவரம்.!

Default Image

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் அலியா பாட், அஜய்தேவ் கான், ஸ்ரேயா சரண், மேலும் சில பல ஹாலிவுட் பிரபலங்களின் நடிப்பில் வெளியான பிரமாண்ட திரைப்படம் ஆர்ஆர்ஆர். இந்த திரைப்படம் கடந்த 25-ஆம் தேதி உலகம் முழுவதும் அணைத்து மொழிகளும் வெளியானது.

இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.ரசிகர்கள் போலவே திரையுலக பிரபலங்களும் படத்தை பார்த்துவிட்டு தங்களது கருத்துக்களை சமூக வலைதளபக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், இந்த படம் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, படம் வெளியான நாளிலிருந்து தற்போது வரை 900-கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. விரைவில் 1000 கோடி வசூல் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த வரம் பீஸ்ட் மற்றும் கேஜிஎப் வெளியாகவுள்ள நிலையில், இந்த படங்கள் வெளியாகும் வரை ஆர்ஆர்ஆர் படத்திற்கு வரவேற்ப்பு நன்றாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனால், விரைவில் ஆர்ஆர்ஆர் 1000 கோடி கடந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்