10 ஆண்டுகளுக்கு பிறகு…பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
விழுப்புரம்:கொழுவாரியில் தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கொழுவாரி கிராமத்தில் ரூ.3 கோடியில் 100 வீடுகளுடன் கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் சற்று முன்னர் திறந்து வைத்து பயனாளிகளுக்கு வீட்டுச் சாவியை வழங்கினார்.இதனைத் தொடர்ந்து,பெரியார் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய முதல்வர் சமத்துவபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளை பார்வையிட்டார்.
இதனிடையே,சமத்துவபுரத்தில் கலைஞர் பூங்கா,விளையாட்டு திடல் உள்ளிட்டவைகளை திறந்து வைத்த முதல்வர் வாலிபால் விளையாடினார்.தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு புதிதாக திறக்கப்பட்டுள்ள சமத்துவப்புரத்தில் ரேசன் கடையும் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Live: விழுப்புரம் மாவட்டம் கொழுவாரியில் தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம் திறப்பு விழா https://t.co/qjvXBbMktl
— M.K.Stalin (@mkstalin) April 5, 2022