#IPL2022: 170 ரன்கள் இலக்கு.. வெற்றிபெறுமா ஹைதராபாத்?

ஐபிஎல் தொடரில் முதலில் களமிறங்கிய லக்னோ அணி 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் அடித்த நிலையில், 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது ஹைதராபாத் அணி களமிறங்கவுள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்று நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதி வருகிறது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் – டி காக் களமிறங்கினார்கள். தொடக்கத்தில் 1 ரன் மட்டுமே அடித்து டி காக் தனது விக்கெட்டை இழந்தார்.
அவரைதொடர்ந்து களமிறங்கிய எவன் லீவிஸ் மற்றும் மனிஷ் பாண்டே சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். இவர்களைதொடர்ந்து களமிறங்கிய தீபக் ஹூடா, கே.எல். ராகுலுடன் இணைந்து சிறப்பாக ஆடி அணியின் ஸ்கொரை உயர்த்தினார். அந்தவகையில் அதிரடியாக ஆடிவந்த தீபக் ஹூடா, 51 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அதிரடியாக ஆடிவந்த கே.எல்.ராகுல் 68 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார்.
இறுதியாக லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தனர். 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது ஹைதராபாத் அணி களமிறங்கவுள்ளது. இந்த போட்டி ஹைதராபாத் அணிக்கு முக்கியமான போட்டி என்பதால், அதனை கருத்தில் கொண்டு சிறப்பாக ஆடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025