எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான அறிக்கை-3 வாரங்களுக்குள் தாக்கல் – உச்சநீதிமன்றம் உத்தரவு!

Default Image

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான அறிக்கையை சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் 3 வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு.

கடந்த அதிமுக ஆட்சியில்  2016-20 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது எஸ்பி வேலுமணி சுமார் ரூ.58 கோடிக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டது.பின்னர் வேலுமணி உள்பட 17 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

ரூ.110 கோடியே 93 லட்சம் பணம் – அனுமதி வழங்கிய நீதிமன்றம்:

spvelumani

இதனையடுத்து,எஸ்பி வேலுமணிக்கு தொடர்புடைய நிறுவனங்களின் வங்கி கணக்கில் இருந்த ரூ.110 கோடியே 93 லட்சம் நிரந்தர வைப்பீட்டு தொகையை லஞ்ச ஒழிப்புத்துறை முடக்கம் செய்தது.இந்த பணத்தை பறிமுதல் செய்ய அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத்துறை சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் பறிமுதல் செய்ய அனுமதி வழங்கியது.

மேல்முறையீடு செய்த முன்னாள் அமைச்சர்:

மேலும்,டெண்டர் முறைகேடு தொடர்பாக எஸ்பி வேலுமணியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அனுமதி கோரிய நிலையில்,சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.ஆனால்,இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எஸ்பி வேலுமணி மேல்முறையீடு செய்திருந்தார்.

மிக மோசமான குற்றச்செயல்கள்:

VELUMANI SP

இந்த மேல்முறையீடு மனுமீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில்,அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மிக மோசமான குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்றும்,வழக்குகளின் விசாரணை நிறைவடைந்து இறுதி அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசுக்கு ரூ.29 கோடி இழப்பு:

மேலும்,வழக்கை இழுத்தடிற்பதற்காக மேல்முறையீட்டு மனுவை எஸ்பி வேலுமணி தாக்கல் செய்துள்ளார் என்றும் தவறான வழியிலும் சட்டத்திற்கு புறம்பாகவும் எஸ்பி வேலுமணி செயல்பட்டுள்ளார் எனவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.குறிப்பாக,சென்னை மாநகராட்சியில் ரூ.114 கோடி மதிப்பு ஒப்பந்தம் பணியில் ரூ.29 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு தெரிவித்தது.

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான அறிக்கை -3 வாரத்திற்குள் தாக்கல்:

இந்த நிலையில்,எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்திலும் தாக்கல் செய்ய தலைமை நீதிபதி ரமணா அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி,எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான அறிக்கையை சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் 3 வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து,வழக்கையும் ஒத்தி வைத்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்