தளபதியை கலாய்க்கும் நெல்சன்.! வெளியான சூப்பர் ப்ரோமோ.!
தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி பீஸ்ட் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம்,மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்திற்கான டிரைலர் கடந்த 2-ஆம் தேதி வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாகியது என்றே கூறலாம்.
இந்நிலையில், பீஸ்ட் படத்திற்கு இசைவெளியிட்டு விழா இல்லை என்பதால் ப்ரோமஷன் நிகழ்ச்சி ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் கேட்கும் கேள்விகளுக்கு விஜய் பதிலளிக்கவுள்ளார்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் @actorvijay அவர்களின் சிறப்பு பேட்டி!
இயக்குனர் @Nelsondilpkumar அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்!விஜய்யுடன் நேருக்கு நேர் | ஏப்ரல் 10 | 9 PM#SunTV #VijayNerukkuNerOnSunTV #Beast pic.twitter.com/J4kFASF8Xy
— Sun TV (@SunTV) April 3, 2022
அந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோ நேற்று வெளியானது. “ப்ரோமோவில் இயக்குனர் நெல்சன் விஜயிடம் எதாவது குட்டிக்கதை இருக்கா..? என்று கேட்கிறார் அதற்கு விஜய் எதுவும் ஸ்டாக் இல்லை என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார்…10 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விஜய் சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.
இதனால், ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்துடன் இந்த நிகழ்ச்சியை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு “விஜய்யுடன் நேருக்கு நேர்” தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி இரவு 9-மணிக்கு இந்த நிகழ்ச்சி சன் டிவியில் ஒளிபரப்பாகிறது.