#IPL2022: லிவிங்ஸ்டன் அதிரடி.. சென்னை அணிக்கு 181 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 180 ரன்கள் அடித்தது. 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது சென்னை அணி களமிறங்கவுள்ளது.
15-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிவருகிறது. பிராபன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் – ஷிகர் தவான் களமிறங்கினார்கள்.
போட்டியின் தொடக்கத்திலே 4 ரன்கள் மட்டும் அடித்து மயங்க அகர்வால் தனது விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து ராஜபக்சா களமிறங்கினார். 9 ரன்கள் அடித்து அவரும் வெளியேற, பின்னர் களமிறங்கிய லிவிங்ஸ்டன், தவானுடன் இணைந்து அதிரடியாக ஆடத் தொடங்கினார். சிறப்பாக ஆடிவந்த தவான் 33 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அதிரடியாக ஆடிவந்த லிவிங்ஸ்டன், 5 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என மொத்தம் 60 ரன்கள் அடித்து வெளியேரினார்.
அவரைதொடர்ந்து களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இறுதியாக பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் அடித்தனர். பந்துவீச்சை பொறுத்தளவில் சென்னை அணியின் ப்ரேட்டோரியஸ், க்றிஸ் ஜார்டன் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்கள். 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது சென்னை அணி களமிறங்கவுள்ளது.