இன்று சென்னை -பஞ்சாப் மோதல்.., மைதானம் பற்றிய முழு விபரம் இதோ ..,!

Default Image

இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்,  பஞ்சாப் அணி மோதவுள்ளது.

இன்று மும்பையில் உள்ள பிராபன் ஸ்டேடியத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸுடன், பஞ்சாப் அணி மோதுகிறது. இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு நடைபெறும். முதல்முறையாக ஐபிஎல்லில் சென்னை அணி தனது முதல் 2 ஆட்டங்களில் தோல்வியை தழுவியது. இதனால், புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.

மறுபுறம் பஞ்சாப் கிங்ஸ் அணியும் 2 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் ஒன்றில் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் அடைந்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இரு அணிகளின் வெற்றியை நோக்கியே இன்று விளையாட உள்ளது.  மும்பையில் இன்று மழைக்கு வாய்ப்பு இல்லை. அதே நேரத்தில், ஈரப்பதம் 71 முதல் 74 சதவீதம் வரை இருக்கும்.

இரவில் காற்று 35 கிமீ வேகத்தில் வீசக்கூடும் இது ஈரப்பதத்திலிருந்து வீரர்களுக்கு சற்று நிம்மதியை தரும். இருப்பினும், இரவில் பனிப்பொழிவு பீல்டிங் மற்றும் பந்துவீச்சில் சிக்கல்களை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தப் போட்டியில் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச முடிவு செய்வது நல்லது.

இந்த மைதானம் பேட்டிங்கிற்கு ஏற்றது. இந்த மைதானத்தில் டி20யில் முதலில் பேட்டிங் செய்யும் அணியின் சராசரி ஸ்கோர் 157 ஆகும். அதேசமயம், பின்னர் பேட்டிங் செய்யும் அணியின் சராசரி 147 ஆகும். இந்த மைதானத்தில் கடந்த ஐபிஎல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 210 ரன்கள் குவித்தது. ஆனால், லக்னோ இந்த இலக்கை 3 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் அடைந்தது.

அதேபோல இதே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ்  மோதியது. இந்தப் போட்டியில், மும்பையின் 178 ரன்கள் இலக்கை டெல்லி அணி 10 பந்துகள் மீதமிருக்கையில் எட்டியது. இந்த மைதானத்தில் இரண்டு முறையும் 2-வது  பேட்டிங் செய்த அணிகள் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்