மாணவர்களே…இறுதித்தேர்வு இல்லை – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாட்டில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு இல்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வருகின்ற மே 6,9 ஆகிய தேதிகள் முதல் மே 30,31 ஆகிய தேதிகள் வரை நடைபெறும் எனவும்,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி முடிவடையும் என்றும் ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது.
இறுதித்தேர்வு இல்லை:
இந்நிலையில்,தமிழ்நாட்டில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை இறுதித்தேர்வு இல்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.எனினும்,6 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு மே 5 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தேர்வு முடிவுகள் எப்போது?:
இதனிடையே,9 ஆம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் வருகின்ற மே 2 முதல் 4 வரை நடைபெறும் எனவும்,6 முதல் 9 ஆம் வரை உள்ள வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 30 ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வகுப்புகள் தொடக்கம்:
மேலும்,நடப்பு கல்வியாண்டுக்கான இறுதி வேலை நாள் மே 13 ஆம் தேதி எனவும்,2022-23ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜுன் 13 ஆம் தேதி தொடங்கும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.அதே வேளை 11 ஆம் வகுப்புக்கு மட்டும் ஜுன் 24 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.