காலநிலை மாற்றத்தால் அமெரிக்காவில் காணாமல் போன ஏரி..!
அமெரிக்காவில் உள்ள பாவெல் ஏரி கிட்டத்தட்ட 9 மாதங்களில் அதன் அனைத்து நீரையும் இழந்து திடலாகிவிட்டது.
காலநிலை மாற்றம் தொடர்ந்து அழிவை ஏற்படுத்துகிறது. பனிப்பாறைகள் சுருங்கி, உலகம் முழுவதும் வெப்பநிலை வேகமாக அதிகரித்து வருவதால் மனிதகுலத்திற்கு பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது 9 மாதங்களில் அமெரிக்காவில் உள்ள பாவெல் ஏரி நீரின்றி காட்சியளிக்கிறது. இந்த ஏரி 1963 ஆம் ஆண்டு கொலராடோ ஆற்றின் அணைக்கட்டு மூலம் உருவாக்கப்பட்டது.
தற்போது இந்த ஏரியின் நீர்மட்டம் குறைந்த மட்டத்திற்குச் சுருங்கிவிட்டது. இவை அனைத்தும் ஒன்பது மாதங்களில் நிகழ்ந்துள்ளது. காலநிலை மாற்றங்கள் அண்டார்டிகா போன்ற உறைந்த கண்டங்களில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. காலநிலை மாற்றத்திலிருந்து மீள முடியாத நிலையை பூமியின் சுற்றுச்சூழல் அமைப்புகள் தற்போது அடைந்துள்ளன.