டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழில் ட்வீட்!
கற்றுக் கொண்டால் மட்டுமே இந்த நாடு முன்னேற முடியும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட்.
டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின், இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார். அப்போது, டெல்லியில் நவீன வசதிகளுடன் உள்ள அரசு பள்ளியை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சேர்ந்து, முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் பார்வையிட்டு, அங்குள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார். டெல்லி அரசு பள்ளியை பார்வையிட்ட முதலமைச்சர், அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சேர்ந்து டெல்லி மொஹல்லா கிளினிக்கை பார்வையிட்டார்.
இந்த நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், டெல்லி அரசின் பள்ளிகள் மற்றும் மொஹல்லா கிளினிக்குகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று பார்வையிட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நாம் ஒவ்வொருவரும் மற்றவருடைய நல்ல, எண்ணங்களையும், கருத்துக்களையும் கற்றுக் கொண்டால் மட்டுமே இந்த நாடு முன்னேற முடியும் என தெரிவித்துள்ளார்.
டெல்லி அரசின் பள்ளிகள் மற்றும் மொஹல்லா கிளினிக்குகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று பார்வையிட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நாம் ஒவ்வொருவரும் மற்றவருடைய நல்ல, எண்ணங்களையும், கருத்துக்களையும் கற்றுக் கொண்டால் மட்டுமே இந்த நாடு முன்னேற முடியும். pic.twitter.com/VLehaRdVTA
— Arvind Kejriwal (@ArvindKejriwal) April 1, 2022