மத்திய நிதியமைச்சருடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

Default Image

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் டெல்லியில் சந்திப்பு.

டெல்லியில் இன்று மத்திய நிதியமைச்சகத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் டிஆர் பாலு எம்பி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மத்திய நிதியமைச்சருடனான சந்திப்பில், தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையை வழங்க கோரி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவுள்ளார். டெல்லி மெகல்லா கிளினிக் மற்றும் அரசு பள்ளிகளை கெஜ்ரிவாலுடன் இணைந்து முதலமைச்சர் பார்வையிடுகிறார் என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்