சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.250 உயர்வு..!
வணீக ரீதியிலான எரிவாயு சிலிண்டர் விலை ரூ.250 உயர்த்தப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1ம் தேதியான இன்று முதல் எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் புதிய மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எண்ணை மற்றும் பெட்ரோலிய நிறுவனங்கள் எல்பிஜி கேஸ் சிலிண்டரின் விலையை ரூபாய் 250 உயர்த்தியுள்ளது.
இது வீட்டில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான கிடையாது. வர்த்தக ரீதியிலான சிலிண்டருக்கு மட்டுமே தற்போது விலை உயர்த்தப்பட்டுள்ளது.
முன்னதாக மார்ச் 22ஆம் தேதி வர்த்தக சிலிண்டர்களின் விலை குறைந்த நிலையில், தற்பொழுது ஐந்து மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்பதாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வர்த்தக ரீதியாக பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர் விலை தற்போது 250 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் 19 கிலோ எடைகொண்ட எல்பிஜி சிலிண்டர் ரூ.2253 ரூபாயாக விற்கப்படுகிறது. மேலும் சென்னையில் 2406 ரூபாயும், மும்பையில் 2205 ரூபாயுமாக இந்த சிலிண்டர் விற்கப்பட்டு வருகிறது.
முன்னதாக கடந்த மார்ச் 22 ஆம் தேதி வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டருக்கான விலையும் ரூ.50 உயர்த்தப்பட்டது. தற்பொழுது வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.949.50 ஆகவும், சில பகுதிகளில் 1000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.