800 அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7% உயர்வு – நாளை முதல் அமல்!

Default Image

நாடு முழுவதும் நாளை முதல் 800 அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7 சதவீதம் வரை நேரடியாக உயர்த்தப்பட உள்ளது.

கொரோனா பரவலின் தாக்கம் காரணமாக,மருந்துத் துறையினர் தொடர்ந்து மருந்துகளின் விலையை உயர்த்தக் கோரி வலியுறுத்தி வருகின்றனர்.இதன்காரணமாக,இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அத்தியாவசிய மருந்துகளின் விலையை மொத்த விலைக் குறியீட்டில் (WPI) 10.7 சதவிகித உயர்த்தவதாக அறிவித்தது.

விலை உயர்வு:

இந்நிலையில்,நாளை முதல் பெரும்பாலான பொதுவான நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்துகளின் தேசிய பட்டியலில் கிட்டத்தட்ட 800 திட்டமிடப்பட்ட மருந்துகளின் விலை  10.7 சதவீதம் வரை உயரவுள்ளது.

அத்தியாவசிய மருந்துகள்:

அதன்படி,காய்ச்சல்,இதய நோய்கள்,உயர் ரத்த அழுத்தம்,தோல் நோய்கள்,ரத்த சோகை போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலை 10.7% உயரும்.இதில் பாராசிட்டமால், ஃபெனோபார்பிடோன், ஃபெனிடோயின் சோடியம், அசித்ரோமைசின், சிப்ரோஃப்ளோக்சசின் ஹைட்ரோகுளோரைடு மற்றும் மெட்ரானிடசோல் போன்ற மருந்துகள் அடங்கும்.

ஆணையம் விளக்கம்:

முன்னதாக,கடந்த 2021 காலண்டர் ஆண்டிற்கான மொத்த விலைக் குறியீட்டில் (Wholesale Price Index) 10.7 % மாற்றத்தை 2020 ஆம் ஆண்டின் இதே காலக்கட்டத்தில் இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அறிவித்தது.பொருளாதார, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் அலுவலகம் வழங்கிய தரவுகளின் அடிப்படையில் இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் 2020 ஆம் ஆண்டு செய்யப்பட்டதைப் போல, இந்தாண்டும் 10.7% விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் விளக்கமளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்