நாளை முதல் காகிதமில்லா அலுவலகமாக மாறும் தலைமைச் செயலகம்!

Default Image

சென்னை:நாளை (ஏப்ரல் 1-ஆம் தேதி) முதல் சென்னை தலைமைச் செயலகம் காகிதமில்லா அலுவலகமாக மாறுகிறது.

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் அனைத்து துறைகளிலும் காகிதங்களின் பயன்பாடு அதிக அளவு உள்ளது.இதற்காகவே ஒரு பெரும் தொகையை செலவிட வேண்டி உள்ளது.

இ-கவர்னன்ஸ் திட்டம்:

இதனை கருத்தில் கொண்டு இந்தச் செலவைக் குறைக்கும் வகையில் அனைத்து துறைகளிலும் காகிதப் பயன்பாட்டைக் குறைத்து கணினி மூலம் கடிதம், ஆவணங்களை அனுப்பும் இ-கவர்னன்ஸ் திட்டத்தை தமிழக அரசு கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.இந்தத் திட்டத்தை அரசின் பல்வேறு துறைகள் செயல்படுத்தி வருகின்றன.

நாளை முதல்:

இந்த நிலையில்,நாளை (ஏப்ரல் 1-ஆம் தேதி) முதல் சென்னை தலைமைச் செயலகம் காகிதமில்லா அலுவலகமாக மாறுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.அதாவது காகிதங்களை அகற்றி கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பயன்படுத்தபட உள்ளது.

பயிற்சி:

அதன்படி,சென்னை தலைமைச் செயலகத்தில் முதற்கட்டமாக சில துறைகளையும் பின்னர் அனைத்து துறைகளும் மின்னணுமயமாக்கப்பட உள்ளன.இதற்காக போதுமான பயிற்சிகள் தலைமைச் செயலக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் தகவல் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்